அதிர்ச்சி விடியோ: டெல்லியில் பைக்கர் மீது மோதிவிட்டு பறந்த கார்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  அதிர்ச்சி விடியோ: டெல்லியில் பைக்கர் மீது மோதிவிட்டு பறந்த கார்!

அதிர்ச்சி விடியோ: டெல்லியில் பைக்கர் மீது மோதிவிட்டு பறந்த கார்!

Jun 07, 2022 12:48 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 07, 2022 12:48 PM IST

டெல்லியில் அதிர்ச்சிகரமான சம்பவத்தின் விடியோ ஒன்று வெளியாகியுள்ளது. நண்பர்களுடன் பயணத்தை முடித்துவிட்டு தங்களது பைக்குகளில் டெல்லி திரும்பிய சுமார் 8 பேர் குழுவினர் சாலையில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அர்ஜென்கார்க் மெட்ரோ நிலையம் அருகே எஸ்யூவி காரில் வந்தவர் ஆபத்தை விளைவிக்கும் விதமாக காரை ஓட்டியதோடு ஒரு பைக்கர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். கார் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த பைக்கர், சாலையில் கீழே உருண்டு பிளாட்பார்மில் மோதியுள்ளார். இதைத்தொடர்ந்து கீழே விழுந்த நபர் அருகே சென்ற சக நண்பர்களில் ஒருவர், காரை வேகமாக விரட்டிப்பிடித்து அந்த கார் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர் அதை பற்றி பொருப்படுத்தாமல் காரை வேகமாக இயக்கி சென்றார். இந்த சம்பவம் முழுவதையும் கேமராவில் விடியோவாக பதிவு செய்த சக பைக்கர்களின் ஒருவர், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த விடியோ வைரலானதோடு கார் டிரைவருக்கும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து ஆபத்தை விளைவிக்கும் விதமாக காரை ஓட்டிய நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திய அந்தக் காரின் எண்ணை வைத்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

More