தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Rameswaram Fishermen Continue Protest

3-வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம்..ராமேஸ்வரத்தில் பரபரப்பு!

Feb 20, 2024 04:20 PM IST Karthikeyan S
Feb 20, 2024 04:20 PM IST
  • இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் படகின் ஓட்டுநர்களுக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கப்படுவதை கண்டித்தும், இரண்டாவது முறையாக எல்லை தாண்டும் மீனவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்குவதை கண்டித்தும் ஏராளமான மீனவர்கள் இன்று 3வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதிச் சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.
More