Ram Mandir: ராமர் கோயில் கும்பாபிஷேகம் - 2 மணி நேரம் விடுப்பு விட்ட மொரிசியஸ் அரசு! வெளிநாடுகளில் நேரலை காண ஏற்பாடு
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Ram Mandir: ராமர் கோயில் கும்பாபிஷேகம் - 2 மணி நேரம் விடுப்பு விட்ட மொரிசியஸ் அரசு! வெளிநாடுகளில் நேரலை காண ஏற்பாடு

Ram Mandir: ராமர் கோயில் கும்பாபிஷேகம் - 2 மணி நேரம் விடுப்பு விட்ட மொரிசியஸ் அரசு! வெளிநாடுகளில் நேரலை காண ஏற்பாடு

Jan 13, 2024 07:59 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 13, 2024 07:59 PM IST

  • வரும் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை காண மொரிஷியஸ் அரசாங்கம் இரண்டு மணி நேரம் சிறப்பு விடுப்பு வழங்கியுள்ளது. இந்து சமூக கலாச்சார குழுக்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத் இந்த முடிவை அறிவித்துள்ளார். மொரிசியஸ் நாட்டில் 48.5 சதவீதத்தினர் இந்துக்கள் வசித்து வருகிறார்கள். இந்தியா, நேபாளத்துக்கு அடுத்தபடியாக உலக நாடுகளில் இந்து மதத்தை பரவலாக கொண்டநாடாக மொரிசியஸ் உள்ளது. அமெரிக்காவிலுள்ள 10 மாகணங்களில் ராமர் மற்றும் ராமர் கோயிலின் 40க்கும் மேற்பட்ட பிரமாண்ட விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஜனவரி 11ஆம் தேதி ஹாஸ்டனில் அமெரிக்காவில் வசிக்கும் இந்து அமைப்பு சார்பில் காரில் ஊர்வலம் நடத்தப்பட்டது. அதேபோல் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா டைம்ஸ் சதுக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பப்படும். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜனவரி 21ஆம் தேதி இந்து அமைப்பினர் ராமருக்கு ரத யாத்திரை நடத்தவுள்ளனர். உலகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஒளிப்பரப்படவுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் முறையே 300, 25, 30, 100க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. உலகம் முழுவதும் 50 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

More