தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Rain Update : புதுச்சேரியை வெளுத்து வாங்கிய கனமழை!

Rain Update : புதுச்சேரியை வெளுத்து வாங்கிய கனமழை!

Jun 01, 2024 06:11 PM IST Pandeeswari Gurusamy
Jun 01, 2024 06:11 PM IST
  • Rain Update :புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநில காக்கிநாடா கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இநநிலையில் அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக கடும் வெப்பத்தினால் அவதிப்பட்டு வந்த நிலையில், திடீரென இன்று அதிகாலை முதல் பலத்த காற்றுடன் சுமார் 4 மணி நேரத்திற்க்கு மேலாக மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு முறிந்து சாலைகளில் விழுந்தது. அதேபோல் விளம்பர பேனர்கள் சாலைகளில் சாய்ந்து விழுந்தது. இதனால் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்களவைத் தேர்தலில் ஏனாம் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள டாக்டர் எஸ்.ஆர்.கே கல்லூரி வளாகத்தை சுற்றி மழைய நீர் தேங்கியும் மரங்கள் விழுந்தும் உள்ளதால், பாதுகாப்பு கருதி அந்த சாலை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. காற்றுடன் பெய்த மழையின் காரணமாக அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாலை முதல் சுமார் 8 மணி வரை மழை பெய்த நிலையில் அங்கு 45.60 மீமி மழை பதிவாகியுள்ளது. சில மணி நேரம் பெய்த இந்த திடீர் மழையினால் அப்பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவினாலும், இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
More