Heavy Rain: அந்தரத்தில் தொங்கும் தண்டவாளங்கள்..100 ரயில்கள் ரத்து!
- ஆந்திரா, தெலங்கானாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. குறிப்பாக, ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டம், என்டிஆர் மாவட்டம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கனமழையால் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதால் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.