Accident: புனேவில் திடீரென உருவான 50 அடி பள்ளத்தில் பின்நோக்கி விழுந்த லாரி - சிசிடிவி காட்சி-pune accident truck falls into deep pit as road caves in cctv video - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Accident: புனேவில் திடீரென உருவான 50 அடி பள்ளத்தில் பின்நோக்கி விழுந்த லாரி - சிசிடிவி காட்சி

Accident: புனேவில் திடீரென உருவான 50 அடி பள்ளத்தில் பின்நோக்கி விழுந்த லாரி - சிசிடிவி காட்சி

Sep 21, 2024 05:18 PM IST Muthu Vinayagam Kosalairaman
Sep 21, 2024 05:18 PM IST

  • மகாராஷ்ட்ரா மாநிலம் புனே நகரில் சாலையில் ஏற்பட்டிருக்கும் பள்ளங்கள் காரணமாக அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இதையடுத்து சதன்ஷா சௌக் பகுதியில் அமைந்திருக்கும் கட்டிடத்தில் நின்று கொண்டிருந்த மாநகராட்சி வாகனத்தின் பின்னால் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. ரிவர்ஸில் வரும்போது ஏற்பட்ட இந்த பள்ளத்தில் கண் இமைக்கும் நேரத்தில் பின் நோக்கியவாறு கவிழ்ந்த அந்த லாரி , சுமார் 40 முதல் 50 அடி ஆழத்தில் விழுந்துள்ளது. லாரியுடன் மேலு சில இரு சக்கர வாகனங்களும் பள்ளத்தில் விழுந்துள்ளன. இதன்பின்னர் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த பள்ளத்தில் விழுந்து சிக்கியிருந்த வாகனத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராட்டத்துக்கு பின் பள்ளத்தில் சிக்கிய வாகனங்கள் ஒரு வழியாக மீட்கப்பட்டது. முன்னதாக பள்ளத்தினுள் விழுவதற்கு முன் லாரியில் இருந்த ட்ரைவர் கீழே குதித்து தப்பியுள்ளார். இந்த விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது

More