Tamil News  /  Video Gallery  /  Pt Usha Meets Wrestlers In Delhi; Makes A 'U-turn' On 'Tarnishing India's Image' Remark

Wrestlers Protest: போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்களை சந்தித் பிடி உஷா! ‘நீதி கிடைக்கும்’ எனவும் உறுதி

03 May 2023, 22:54 IST Muthu Vinayagam Kosalairaman
03 May 2023, 22:54 IST
  • இந்திய மல்யுத்த சமமேளம் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து, அவரை கைது செய்ய கோரி பிரபல மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 11 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குற்றம்சாட்டு விவகாரம் தொடர்பாக ஆராயும் கமிட்டி அறிக்கை சமர்பிப்பதற்குள் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை விமர்சித்தார் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பிடி உஷா. இந்த போராட்டம் இந்தியாவுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார். பிடி உஷாவின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பிடி உஷா போராட்டத்தில் ஈடுபடும் வீரர்கள் நேரில் சந்தித்து உரையாடினார். மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை விமர்சித்த பிறகு முதல் முறையாக பிடி உஷா அவர்களை நேரில் சந்தித்துள்ளார். முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். இதைத்தொடர்ந்து பிடி உஷா அவர்களுடன் இந்த சந்திப்பை நிகழ்த்தியுள்ளார். இந்த சந்திப்புக்கு பின்னர் இந்த விவகாரத்தில் நீதி கிடைக்கும் என பிடி உஷா தெரிவித்ததாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கூறினார்.இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸார் இந்திய மல்யுத்த சமமேளம் தலைவர் பிரிஜ் பூஷன் மீது ஒரு போக்சோ வழக்கு உள்பட இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த பிரிஜ் பூஷன், தான் ஒரு அப்பாவி எனவும், கட்சி மேலிடம் சொன்னால் ராஜிநாமா செய்யவும் தயார் எனவும் கூறினார்.
More