Thiruvarur: மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம் - கைக்கூப்பி வணங்கிய மருத்துவ கல்லூரி முதல்வர்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Thiruvarur: மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம் - கைக்கூப்பி வணங்கிய மருத்துவ கல்லூரி முதல்வர்

Thiruvarur: மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம் - கைக்கூப்பி வணங்கிய மருத்துவ கல்லூரி முதல்வர்

Published Feb 24, 2024 03:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Feb 24, 2024 03:00 PM IST

  • திருவாரூர் நகரத்துக்கு உட்பட்ட சின்ன மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த வீரப்பன் (44) என்ற தனியார் நிதி நிறுவன மேலாளர், அவரது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென பக்கவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக உறவினர்கள் அவரை தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி மூளையின் ரத்தம் உறைந்து மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் அளிக்க குடும்பத்தினர் முடிவு செய்து வீரப்பனின் உடலை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தனர். அங்கு கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் வீரப்பன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், உடல் உறுப்பு தானம் செய்ய முடிவெடுத்த வீரப்பனின் குடும்பத்தினரை கைப்கூப்பி வணங்கினார்.

More