Drugs Seize: கல்லூரி விடுதியில் மறைத்து வைக்கப்பட்ட கஞ்சா சாக்லெட், போதை மாத்திரைகள் - 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது
- சென்னை புறநகர் பகுதியான காட்டங்குளத்தூரில் அமைந்திருக்கும் தனியார் கல்லூரி வளாகத்தில் கஞ்சா நடமாட்டம் இருப்பதாக வந்த புகாரை அடுத்து அங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர். இதையடுத்து கல்லூரி விடுதியில் போதை பொருள்கள் மறைத்து வைத்திருந்ததாக கூறி 30க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது