Fake Currency: சிக்கியது கள்ளநோட்டு தயாரிக்கும் கும்பல்..பெண் உட்பட 5 பேர் கைது - ஒருவர் தலைமறைவு!
- திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டில் அம்மைய நாயக்கனூர் காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான கார் ஒன்றை சோதனை செய்த போது, அதில் ரூ.26,500 மதிப்புள்ள ரூ.100 கள்ளநோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கள்ள நோட்டுகள் மற்றும் கள்ள நோட்டு அச்சடிக்கும் மிஷின்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். காரில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது இருவர் தப்பியோடினர். பின்னர் இதில் தொடர்புடைய பெண் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி போலீசார் பிடியிலிருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.