தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Pmk: கள்ளத்தனமாக மது விற்பனையை கண்டித்து பாமக வேட்பாளர் திலகபாமா போராட்டம்

PMK: கள்ளத்தனமாக மது விற்பனையை கண்டித்து பாமக வேட்பாளர் திலகபாமா போராட்டம்

Apr 17, 2024 02:48 PM IST Pandeeswari Gurusamy
Apr 17, 2024 02:48 PM IST
  • தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பாமக வேட்பாளர் திலகபாமா பரப்புரை மேற்கொண்ட போது கள்ளத்தனமாக திண்டுக்கல் புறவழிச்சாலையில் மது விற்பனை செய்த குடோனை பாமக வேட்பாளர் சிறை பிடித்து தரையில் அமர்ந்து போராட்டம் நாளை மறுதினம் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு அரசு மதுபான கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பாமக வேட்பாளர் திலகபாமா இன்று இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்ட போது திண்டுக்கல் புறவழி சாலையில் கொட்டப்பட்டி சாலையில் கள்ளத்தனமாக ஒரு குடோனில் மது விற்பனை செய்து கொண்டிருந்தனர். பரப்புரையில் ஈடுபட்டிருந்த திலகபாமா உடனடியாக வாகனத்தில் இருந்து கீழே இறங்கி குடோனுக்கு உள்ளே நுழைந்து கள்ளத்தனமாக மது விற்பனை செய்த விற்பனையாளர்களை சிறை பிடித்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். உடனடியாக தொலைபேசி வாயிலாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தொடர்பு கொண்டு திண்டுக்கல்லில் அரசு மதுபான கடை விடுமுறை என்றாலும் கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் கள்ளத்தனமாக மது விற்பனை செய்த குடோனை சீல் வைத்து விற்பனையா ளர் சேசு என்பவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
More