தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Pm Narendra Modi: 'வேலூர் மண் மீண்டும் புரட்சி செய்யும்' - பிரதமர் மோடி சூளுரை!

PM Narendra Modi: 'வேலூர் மண் மீண்டும் புரட்சி செய்யும்' - பிரதமர் மோடி சூளுரை!

Apr 10, 2024 12:24 PM IST Karthikeyan S
Apr 10, 2024 12:24 PM IST
  • வேலூரில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பொதுக் கூட்டத்தில் பேசினார். தமிழில் வணக்கம் சொல்லி தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி, அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் பிரதமர் பேசுகையில், துணிச்சல் மிக்க வேலூர் மக்களுக்கு வணக்கம். ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக வேலூரில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது. வேலூர் மண் மீண்டும் ஒரு புரட்சி செய்ய இருக்கிறது. தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஒட்டு மொத்த தமிழகமும் மீண்டும் மோடி அரசு வேண்டும் என சொல்கிறது." என்றார்.
More