Kachchatheevu: கச்சத்தீவை தாரைவார்த்தது யார்?.. மேடையில் உரக்க சொன்ன பிரதமர்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Kachchatheevu: கச்சத்தீவை தாரைவார்த்தது யார்?.. மேடையில் உரக்க சொன்ன பிரதமர்!

Kachchatheevu: கச்சத்தீவை தாரைவார்த்தது யார்?.. மேடையில் உரக்க சொன்ன பிரதமர்!

Published Apr 11, 2024 05:50 AM IST Karthikeyan S
Published Apr 11, 2024 05:50 AM IST

  • கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது காங்கிரஸும், திமுகவும்தான் என குற்றம்சாட்டினார். மேலும் பிரதமர் பேசுகையில், "காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்துவிட்டார்கள். அந்த உண்மையை மக்களுக்கு சொல்லாமல் மறைக்கிறார்கள். யாருடைய நலனுக்காக இதை கொடுத்தார்கள் என்பது தெரியும். இன்றைக்கு அதைப்பற்றி பேசாமல் காங்கிரஸ் மவுனம் சாதிக்கிறது. கச்சத்தீவை தாரைவார்த்ததால் நமது மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இலங்கை கடற்படை மூலம் சிறைபிடிக்கப்படும் மீனவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முயற்சியால் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களை எனது அரசு மீட்டு கொண்டுவந்தது. காங்கிரஸும், திமுகவும் மீனவர்களுக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கும் துரோகம் செய்தவர்கள்." என்று பேசினார்.

More