Parliament Attack: நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த சம்பவம் - மொத்தம் 4 பேர் கைது
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Parliament Attack: நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த சம்பவம் - மொத்தம் 4 பேர் கைது

Parliament Attack: நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த சம்பவம் - மொத்தம் 4 பேர் கைது

Dec 13, 2023 10:11 PM IST Muthu Vinayagam Kosalairaman
Dec 13, 2023 10:11 PM IST

  • நாடாளுமன்ற வளாகத்தில் டிசம்பர் 13ஆம் தேதி பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்த இருவர் வண்ண புகையால் நிரப்பப்பட்ட எரிவாயு குப்பிகளை வீசி சென்ற விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. அவை நடவடிக்கை ஒத்திவைப்புக்கு முன்னர் சபாநாயகரும், எம்பியுமான ராஜேந்திர அகர்வால் அமர்ந்திருக்கும் பெஞ்சை நோக்கி இருவர் சென்ற விடியோ வைரலாகியுள்ளது. 2001 நாடாளுமன்ற தாக்குதலுக்கு சம்பவம் நடந்த அதே நாளில் சுமார் 22 ஆண்டுகள் கழித்து நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது. திமுக எம்பி செந்தில்குமார் பகிர்ந்திருக்கும் புகைப்படத்தில் நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த அந்த இரு நபர்களின் புகைப்படம் தெளிவாக உள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து அவை நடவடிக்கையை உடனடியாக ஒத்திவைத்தார். அந்த இரு நபர்களையும் மடக்கி பிடித்த பாதுகாவலர்கள், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே காலிஸ்தானி ஆதரவாளர் குர்பத்வாந்த் சிங் பன்னும் இந்திய நாடாளுமன்றத்தில் டிசம்பர் 13ஆம் தேதி தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கிடையை நாடாளுமன்றம் வளாகத்துக்கு வெளியே வண்ண புகை குப்பியை வீசி போராட்டத்தில் ஈடுபட்ட ஆண், பெண் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

More