Viral video: பாகிஸ்தானில் கர்ப்பிணி பெண்ணை எட்டி உதைத்த பாதுகாவலர் கைது! -pak security guard abuses kicks pregnant woman viral video triggers outrage - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Viral Video: பாகிஸ்தானில் கர்ப்பிணி பெண்ணை எட்டி உதைத்த பாதுகாவலர் கைது!

Viral video: பாகிஸ்தானில் கர்ப்பிணி பெண்ணை எட்டி உதைத்த பாதுகாவலர் கைது!

Aug 09, 2022 03:31 PM IST Muthu Vinayagam Kosalairaman
Aug 09, 2022 03:31 PM IST

பாகிஸ்தானில் கர்ப்பிணி பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாவலர் ஒருவர் எட்டி உதைக்கும் விடியோ வைரலான நிலையில், போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். கராச்சி நகரிலுள்ள குளிஸ்தா்-இ-ஜெளஹர் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் பணிப்பெண்ணாக வேலை பார்க்கும் பெண் ஒருவர் தனது மகனிடம் சாப்பாடு கொண்டு வருமாறு தெரிவித்துள்ளார். அவரது மகன் தனது தாய்க்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்த முற்பட்டபோது கேட் அருகே தடுத்து நிறுத்தியுள்ளார் பாதுகாவலர். இதையடுத்து அங்கு வந்த அந்த பெண் பாதுகாவலரிடம் தனது மகனை தடுத்து நிறுத்தியது தொடர்பாக முறையிட்டுள்ளார். இதனால் கோபமடைந்த பாதுகாவலர் அந்த பெண் கர்ப்பிணி என்று கூட பாராமல் கன்னத்தில் பளார் என அறைந்து கீழே தள்ளியுள்ளார். பின்னர் அந்தப் பெண் தடுமாறியவாறு எழுந்தரிக்க முயற்சித்தபோது எட்டி உதைத்துள்ளார். பாதுகாவலரின் இந்த மோசமான நடத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் நெட்டிசன்களை அவரது செயலுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த பாதுகாவலரை கைது செய்தனர்.

More