தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Bsf: சர்வதேச எல்லையில் திடீர் பாகிஸ்தான் தாக்குதல்! பதில் தாக்குதல் நடத்திய எல்லை பாதுகாப்பு படை - 5 தீவிரவாதிகள் கொலை

BSF: சர்வதேச எல்லையில் திடீர் பாகிஸ்தான் தாக்குதல்! பதில் தாக்குதல் நடத்திய எல்லை பாதுகாப்பு படை - 5 தீவிரவாதிகள் கொலை

Oct 27, 2023 08:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Oct 27, 2023 08:45 PM IST
  • ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லையில் அருகே இருக்கும் அர்னியா செக்டாரில் உள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படை செக்போஸ்ட்களில், பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் குறிவைத்ததாக தாக்குதல் நடத்தியதாக எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 26ஆம் தேதி இரவு 8 மணி அளவில் இந்த தாக்குதல் நடைபெற்ற நிலையில், நீண்ட நேரம் நீடித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு எல்லை பாதுகாப்பு படையினர் தக்க பதிலடியும் கொடுத்துள்ளனர். இதேபோல் மற்றொரு சம்பவமாக காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சில் செக்டார் பகுதியில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற ஐந்து லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளை இந்திய படைகள் சுட்டுக் கொன்றனர். உயிரிழந்த தீவிரவாதிகளிடமிருந்து ஐந்து ஏகே சீரிஸ் ரைபிள்கள் கைப்பற்றப்பட்டன. அத்துடன் இவர்களின் அடையாளம் குறித்து கண்டறியப்பட்டு வருகிறது. கடந்த வாரம் இதே போல் அர்னியா செக்டாரில் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் காயமடைந்தனர். எந்தவொரு தூண்டலும் இல்லாமல் பாகிஸ்தான் இந்த திடீர் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் நடைபெற்ற இரண்டு தாக்குதல்களிலும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. கடந்த 2021 பிப்ரவரி மாதம் 2003 இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கான தங்களது உறுதிமொழியை புதுப்பித்தது. இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் கெரான் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் நடத்தியதாக சந்தேகிக்கும் தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படை வீரர் காயமடைந்தார்.
More