Accident: ஓவர் ஸ்பீடில் வந்த கார்..கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து - அதிர்ச்சி சிசிடிவி காட்சி
- கர்நாடகா மாநிலம் தக்சினா கன்னடா மாவட்டத்தில் புட்டூர் அருகே சாலையில் வேகமாக வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விழுந்துள்ளது. இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. வளைவில் திரும்பும்போது வேகமாக வந்ததால் ட்ரைவர் கட்டுப்பாட்டை இழந்துள்ளார். இந்த விபத்தை அடுத்து அருகில் வசித்தவர்கள் ஒன்றுகூடி கவிழ்ந்து கிடந்த காரை சாய்த்து நேராக வைத்தனர். இந்த விபத்தில் காரில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் தப்பியுள்ளனர்.