Dutch Coast: Mercedes, BMW கார்களுடன் பயணிக்கும் கப்பலில் தீ விபத்து! நடுகடலில் தவிப்பு - விடியோ
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Dutch Coast: Mercedes, Bmw கார்களுடன் பயணிக்கும் கப்பலில் தீ விபத்து! நடுகடலில் தவிப்பு - விடியோ

Dutch Coast: Mercedes, BMW கார்களுடன் பயணிக்கும் கப்பலில் தீ விபத்து! நடுகடலில் தவிப்பு - விடியோ

Jul 28, 2023 02:32 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jul 28, 2023 02:32 PM IST

  • ஃப்ரீமேண்டில் ஹைவே என் பெயர் கொண்ட சரக்கு கப்பல் நடுக்கடலில் தீ விபத்துக்குள்ளாகி பற்றி எரிந்துள்ளது. உலக புகழ் பெற்ற பிராண்ட் கார்களான மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ கார்கள் இதில் நிரப்பப்பட்டுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வேலையில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. டச்சு தீவு அமீலாந்து வடக்கே 27 கிமீ தூரத்தில் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த தீ விபத்தில் கப்பல் குழுவில் இடம்பிடித்த இந்தியர் ஒருவர் உயரிழந்துள்ளார். தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்த கப்பல் எரிந்து வரும் நிலையில், தீ அணையாமல் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. பல்வேறு அரிய வகை புலம்பெயர் பறவை இனங்கள் வந்து செல்லும் கடற்பரப்பில் ஏற்பட்டிருக்கும் இந்த விபத்து காரணமாக அவை அழிவதற்கான சூழல் உருவாகியுள்ளதாக சுற்றுச்சுழலியாளர்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஜெர்மனி நாட்டிலுள்ள பிரேமர்ஹேவன் துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி இந்த கப்பல் புறப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டை சேர்ந்த இந்த கப்பலில் 2,857 கார்கள் உள்ளன. இதில் 25க்கும் மேற்பட்ட பேட்டரி கார்களும் இடம்பிடித்துள்ளன.

More