Odisha Train Accident: சிக்னல் கேளாறால் ரயில் விபத்து ஏற்படவில்லை? விசாரணை அதிகாரி அறிக்கையால் திருப்புமுனை
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Odisha Train Accident: சிக்னல் கேளாறால் ரயில் விபத்து ஏற்படவில்லை? விசாரணை அதிகாரி அறிக்கையால் திருப்புமுனை

Odisha Train Accident: சிக்னல் கேளாறால் ரயில் விபத்து ஏற்படவில்லை? விசாரணை அதிகாரி அறிக்கையால் திருப்புமுனை

Jun 07, 2023 09:02 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 07, 2023 09:02 PM IST

  • ஒடிசா ரயில் விபத்து விவகாரத்தில் சிக்னல் பிரச்னை இல்லை என்று வெளியாகியிருக்கும் புதிய தகவல் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் மூத்த பிரிவு பொறியாளரான ஏகே மகந்தா, கோரமன்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மெயின் லைனில் செல்வதற்கு பச்சை சிக்னல் அளிக்கப்பட்டதாகவும், லூப் லைனில் செல்வதற்கான சிக்னல் அளிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். தவறான சிக்னல் காட்டியதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டிருக்கிறது என்று வெளியாகும் தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதன்மூலம் சிக்னல் தவறு காரணமாக இந்த விபத்து ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் அறிக்கையும் தாக்கல் செய்துள்ளார். டேட்டாலாக்கர் தகவலின் அடிப்படையில், அறிக்கையில் உள்ள 17வது புள்ளி ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ரயில் தடம் புரண்ட பிறகு அது தவறாக மாறியிருக்கலாம். அங்கிருக்கும் லெவல் கிராசிங்குக்கு முன் ரயில் தடம் புரண்டுள்ளது. இந்த ரயில் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தும் 5 பேர் குழுவில் ஒருவராக இருக்கும் எஞ்சினியரான இவர், சிக்னல் தவறுதான் விபத்துக்கு காரணமாக என ஒப்புக்கொண்டாலும், அவர் குறிப்பிட்டிருக்கும் இந்த தகவல் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதற்கிடையே டேட்டாலாக்கர் பதிவு செய்துள்ள டேட்டாலாக்கர் தகவல்கள் ரயில்வே நிர்வாகம் கைபற்றியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணையும் நடைபெற்று வருகிறது.

More