Moon Mission: சிக்னல் அனுப்பாத விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் - தட்டி எழுப்பும் முயற்சி தீவிரம்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Moon Mission: சிக்னல் அனுப்பாத விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் - தட்டி எழுப்பும் முயற்சி தீவிரம்

Moon Mission: சிக்னல் அனுப்பாத விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் - தட்டி எழுப்பும் முயற்சி தீவிரம்

Sep 23, 2023 04:32 PM IST Muthu Vinayagam Kosalairaman
Sep 23, 2023 04:32 PM IST

  • சந்திரயான் 3 லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றின் செயல்பாட்டை மீண்டும் விழப்படைய செய்யும் பணியை ஒத்தி வைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலவின் தனது ஆய்வு பணிகளை செய்த விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர், நிலவின் இரவுக்கு பின்னர் அதன் செயல்பாட்ட தொடங்குவதற்காக தொடர்பு கொள்ளப்பட்டது. ஆனால் அவை இரண்டிலும் இருந்து எவ்வித சிக்னல்களும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவை இரண்டையும் செயல்படுத்துவதற்கான பணி தொடர்ந்து நடைபெறும் என இஸ்ரோ வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. நீண்ட நாள்கள் கடும் குளிரில் இருந்ததன் காரணமாக லேண்டர் மற்றும் ரோவர் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். சந்திரனில் வெப்பநிலை -10 டிகிரிக்கும் அதிகமான பின்னர் இவற்றை செயல்படுத்தும் முயற்சி மீண்டும் தொடங்கப்படும். பூமி நாள்களில் 16 நாள்கள் வரை ரோவர் மற்றும் லேண்டர் ஸ்லிப் மோடில் இருந்துள்ளது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகிய இரண்டும் 1 சந்திர நாளில் செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

More