First National Flag: சென்னை ஜார்ஜ் கோட்டையில் பொதுமக்கள் பார்வையில்..முதல் முறையாக ஏற்றப்பட்ட இந்திய தேசிய கொடி
- 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி, ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து நம் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் மூவர்ண தேசிய கொடி ஏற்றிப்பட்டது. அதிகாலை 5:30 மணிக்கு முதல் சுதந்திர தின விழா நடந்தது. காலை 5:05 மணிக்கு பிரிட்டீஷ் ஒன்றியம் பதவி நீக்கம் செய்யப்பட்டு 25 நிமிடங்களுக்கு பின்னர் இந்த நிகழ்வு இடம்பெற்றது. அப்போது முதல் முறையாக ஏற்றப்பட்ட தேசிய கொடியை இந்திய தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது. தற்போது இந்த கொடியானது சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்த கொடி ஜனவரி 26, 2013 முதல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கொடி எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள்.