Natham Mariyamman Temple: 10ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் காப்பு கட்டி 15 நாள் விரதம்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Natham Mariyamman Temple: 10ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் காப்பு கட்டி 15 நாள் விரதம்!

Natham Mariyamman Temple: 10ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் காப்பு கட்டி 15 நாள் விரதம்!

Feb 13, 2024 11:36 AM IST Manigandan K T
Feb 13, 2024 11:36 AM IST

  • திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும்.இதன் முக்கிய திருவிழாவான மாசி பெருந்திருவிழா நேற்று (பிப்.12) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று பக்தர்கள் உலுப்பகுடி அருகிலுள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து அங்கிருந்து புனித தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்து அரண்மனை சந்தன கருப்பு கோவிலில் சேர்ந்தனர்.பின்னர் அங்கிருந்து மேளதாளம் முழங்க வர்ணக் குடைகளுடன் பரிவாரங்களுடன் ஊர்வலமாக அங்கு கூடியிருந்த பக்தர்களை கோவிலுக்கு அழைத்து வந்தனர்.பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடங்களை தலையில் சுமந்தபடி மஞ்சள் ஆடைகள் அணிந்த நிலையில் கோவிந்தா கோஷம் முழங்க மாரியம்மன் கோயிலை சென்றடைந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.தொடர்ந்து பக்தர்கள் மஞ்சள் காப்பு கட்டினர்.இதில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி 15 நாள் விரதம் தொடங்கினர்

More