Moon Mission: எரிபொருள் கசிவால் சிக்கல்! நிலவில் மனிதனை களமிறக்கும் தனியார் நிறுவனம் முயற்சி தோல்வி
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Moon Mission: எரிபொருள் கசிவால் சிக்கல்! நிலவில் மனிதனை களமிறக்கும் தனியார் நிறுவனம் முயற்சி தோல்வி

Moon Mission: எரிபொருள் கசிவால் சிக்கல்! நிலவில் மனிதனை களமிறக்கும் தனியார் நிறுவனம் முயற்சி தோல்வி

Jan 09, 2024 09:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 09, 2024 09:30 PM IST

நிலவில் மனிதர் இறக்கும் பிரபல அமெரிக்க நிறுவனத்தின் முயற்சி சிக்கலில் முடிந்தது. எரிபொருள் கசிவு காரணமாக இவ்வாறு நிகழ்ந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு கழித்து அமெரிக்காவில் மனிதனை களமிறக்கும் முதல் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. அமெரக்காவின் ஆஸ்ட்ரோபோடிக் டெக்னாலஜி ஜனவரி 8ஆம் தேதி மனிதனை அனுப்ப திட்டமிட்டிருந்த நிலையில், இந்த பயணம் தொடங்குவதற்கு சில மணி நேரங்கள் முன்பு எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த ஆஸ்ட்ரோபோட்டிக் நிறுவனத்தின் நிலா பயண முயற்சிக்கு நாசா நிதி வழங்கியுள்ளது. பிட்ச்பர்கை சேர்ந்த ரோபோடிக் நிறுவனம் அதன் லேண்டரை சூரியன் நோக்கி செலுத்தி, அதன் சோலார் பேனல் சூரிய ஒளியை சேகரித்து பேட்டரியை சார்ஜ் செய்யும். இதன் உந்துவிசை அமைப்பில் ஏற்பட்ட தோல்வியை ஆராயும் பணியை சிறப்பு அணி மேற்கொண்டுள்ளது. இதில் எரிபொருளில் இழப்பு ஏற்பட்டது குறித்து தெரியவந்தது. இந்த கசிவானது தொடர்ந்து இருந்து வருவதாகவும், சுமார் 40 மணி நேரத்துக்கும் மேலாக லேண்டர் தனது சோலார் சக்தியை இழந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லிப்ட் செய்வதற்கு 7 மணி நேரம் முன்பாகவே இந்த பிரச்னையானது இருந்து வருகிறது. யுனைடெட் லான்ச் அலையன்ஸ், வல்கன் ராக்கெட் பெரேக்ரின் லேண்டருக்கு லிப்ட் வழங்கியது. இந்த பிரச்னை, நிலவில் மெதுவாக தரையிறங்கும் விண்கலத்தின் திறனை அச்சுறுத்தும் விதமாக இருப்பதாக நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஆஸ்ட்ரோபோடிக் நிறுவனமானது லேண்டர் மவுண்டர் கேமராவில் இருந்து ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டது. நிலவில் தரையிறங்கும் முதல் தனியார் வணிகமாக ஆஸ்ட்ரோபோடிக் இலக்கு வைத்திருந்தது. அமெரிக்காவில் கடைசியாக 1972 டிசம்பரில் நிலவின் தரையிறக்கமானது நிகழ்ந்தது. அப்பல்லோ 17s ஜீன் செனான் மற்றும் ஹாரிசன் ஸ்மிட் நிலவில் நடந்த 11 மற்றும் 12வது மனிதர்கள் ஆனார்கள்.

More