கவரப்பேட்டை ரயில் விபத்தில் தண்டவாளங்கள் இணைப்பு துண்டிக்கப்பட்டது கண்டுபடிப்பு! தீவிர விசாரணை
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  கவரப்பேட்டை ரயில் விபத்தில் தண்டவாளங்கள் இணைப்பு துண்டிக்கப்பட்டது கண்டுபடிப்பு! தீவிர விசாரணை

கவரப்பேட்டை ரயில் விபத்தில் தண்டவாளங்கள் இணைப்பு துண்டிக்கப்பட்டது கண்டுபடிப்பு! தீவிர விசாரணை

Published Oct 12, 2024 09:24 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Oct 12, 2024 09:24 PM IST

  • மைசூர் - தர்பங்கா விரைவு ரயில் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கவர்பேட்டையில் விபத்துக்குள்ளானது. எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதியதில் 13 பெட்டிகள் தடம் புரண்டு தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 19 பேர் படுகாயமடைந்த போதிலும், இந்த பயங்கர விபத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை. இச்சம்பவத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மொத்தம் 8 ரயில்களின் வழித்தடத்தை தெற்கு ரயில்வே மாற்றியுள்ளது. விபத்து நடந்த பகுதியில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில், தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அப்போது, என்ஐஏ அதிகாரிகள் ரயில்வே துறை அதிகாரிகள், போலீசாருடன் இணைந்து விபத்து நடந்த பகுதியில் ஒவ்வொரு இடமாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாதிரிகளை சேகரித்து உள்ளனர். மேலும், ரயில்வே அதிகாரிகளிடம் இந்த விபத்து தொடர்பான பல்வேறு விவரங்களை கேட்டு அறிந்துள்ளனர்

More