Palani: ரூ. 3 கோடி சொத்துவரி வசூலாக வேண்டி பழனிக்கு பாதயாத்திரை - பேரூராட்சி உறுப்பினரின் விநோத வழிபாடு
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Palani: ரூ. 3 கோடி சொத்துவரி வசூலாக வேண்டி பழனிக்கு பாதயாத்திரை - பேரூராட்சி உறுப்பினரின் விநோத வழிபாடு

Palani: ரூ. 3 கோடி சொத்துவரி வசூலாக வேண்டி பழனிக்கு பாதயாத்திரை - பேரூராட்சி உறுப்பினரின் விநோத வழிபாடு

Jan 29, 2024 10:15 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 29, 2024 10:15 PM IST

  • கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம் திருமலையம்பாளையம் பேரூராட்சி மன்ற உறுப்பினராக இருந்து வரும் ரமேஷ்குமார் பேரூராட்சியில் நடக்கும் மோசடிகளை எதிர்த்து, தொடர்ந்து போராடி வருகிறார். மதுக்கரை பகுதியில் இயங்கி வரும் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நேரு இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப் கல்லூரி நீண்ட காலமாக செலுத்த வேண்டிய சொத்து வரியான ரூ. 3 கோடி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருவதால் பேரூராட்சியில் மக்களுக்கான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அத்துடன் பொதுமக்களின் கேள்விக்கு உறுப்பினர்கள் பதில் சொல்லாமல் முடியாத சூழல் உள்ளது. நேரு கல்விக்குழுமத்திடம் பலமுறை சொத்து வரியை செலுத்த சொல்லி பேரூராட்சி நிர்வாகம் வலியுறுத்தியபோதும், அவர்கள் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி வரியை கட்டாமல் ஏமாற்றி வருகின்றனர். நேரு கல்வி குழும நிர்வாகத்தினர் சொத்து வரியை உடனடியாக செலுத்த வேண்டி, திருமலையம்பாளையத்தில் இருந்து பழனி மலை வரை 100 கிலோமீட்டர் வரை கைகளில் வேல், பேனருடன் வழி நெடுகிலும், தனது பயணத்தின் நோக்கம் குறித்து ரமேஷ்குமார் பேசி செல்கிறார். பாதயாத்திரையை அந்த பேனரில் நேரு கல்வி குழுமத்தினர் ரூ. 3 கோடி சொத்து பாதயாத்திரை; என் மக்களுக்கான வளர்ச்சிப்பணிகளை நிறைவேற்றி தர வேண்டி பழனி பாதயாத்திரை என குறிப்பிட்டிருந்தது. இந்த விநோத வழிபாட்டின் மூலம் ரமேஷ்குமார் பக்தர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.

More