தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Money Distribution In Election Candidate Introduction Meeting In Sivagangai

Election 2024: வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ரூ. 200 பணப்பட்டுவாடா - சிவகங்கையில் அதிர்ச்சி

Mar 30, 2024 07:24 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 30, 2024 07:24 PM IST
  • சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம், அதிமுக சார்பில் சேவியர் தாஸ், பாஜக வேட்பாளராக தேவநாதன் யாதவ், நாம் தமிழர் கட்சி சார்பில் எழிலரசி மற்றும் சுயேட்சைகள் என பலர் போட்டியிடுகின்றனர். நான்கு முனை போட்டி நிலவும் இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகம் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கல்லல் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சுற்றுப்புற பகுதியில் இருந்து ஏராளமானோர் அழைத்து வரப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மானாமதுரை சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ தமிழரசி, வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்தவுடன் மண்டபத்தில் இருந்து வெளியேறியவர்களுக்கு தேர்தல் விதிமுறைகளை மீறி பொதுவெளியில் தலா ரூ. 200 பட்டுவடா செய்யப்பட்டது. அதன் விடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
More