தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Seeman: ரோடு ஷோ செய்யும் மோடி, வெள்ளத்தில் மிதந்த போது ஒரு தடவ வந்து பார்த்திருக்கணும்- சீமான்

Seeman: ரோடு ஷோ செய்யும் மோடி, வெள்ளத்தில் மிதந்த போது ஒரு தடவ வந்து பார்த்திருக்கணும்- சீமான்

Apr 10, 2024 10:28 PM IST Pandeeswari Gurusamy
Apr 10, 2024 10:28 PM IST

கோவை பாப்பநாய்க்கன்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய சீமான், "மதம், சாமி அது இருந்தால் அவர்களுக்கு போதும், சாதி மதத்தை வைத்து ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மக்களை பற்றி எப்படி சிந்திப்பார்கள்? இத்தனை முறை ஓடோடி வந்து ரோடு ஷோ செய்யும் மோடி, நீங்கள் வெள்ளத்தில் மிதந்த போது ஒரு தடவை ஓடி வந்து பார்த்திருக்க வேண்டும் அல்லவா? அல்லது அறிக்கை விட்டு இருக்க வேண்டும் அல்லவா? நம்மை அவர்கள் ஒரு உயிராகக் கூடக் கருதமாட்டார்கள். இந்த நிலத்தை ஏன் இந்தியாவோட வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், இந்த நிலத்தில் உள்ள வளம் தான் காரணம். மீத்தேன், ஈத்தேன் கங்கை நதிக்கரையில் இல்லையா? ஏன் தமிழ்நாட்டில் எடுக்கிறார்கள்? எனது மண்ணை நாசமாக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இப்போது இருப்பதையாவது காப்பாற்ற வேண்டும். பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக இவற்றையெல்லாம் மீண்டும் மீண்டும் பிடித்தது தொங்குவது என்பது மிகப்பெரிய பேராபத்து” எனத் தெரிவித்தார்

More