‘ஆளுநர் இதையெல்லாம் சொன்னால்' .. அமைச்சர் ராஜ கண்ணப்பன் பரபரப்பு!
- சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், மோசமான நிலையில் இருப்பதால் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 25 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த கல்லூரிகளை மூட வேண்டுமா இல்லையா என்பது குறித்து சிண்டிகேட் முடிவெடுக்கும் என்று தெரிவித்தார். மேலும், ஆளுநர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன், ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. அவர் அவர் வேலையைப் பார்க்கிறார். நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம். அரசியல் ரீதியான கருத்துகளைத் தவிர நிர்வாக ரீதியாக அவர் சொல்லும் கருத்துகளை ஏற்றுக்கொள்வோம்." என்றார்.