Minister Muthusamy: 'எல்லோருமே அவரு பெயரை சொல்லி தான்'.. - அண்ணாமலைக்கு அமைச்சர் முத்துசாமி பதிலடி!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Minister Muthusamy: 'எல்லோருமே அவரு பெயரை சொல்லி தான்'.. - அண்ணாமலைக்கு அமைச்சர் முத்துசாமி பதிலடி!

Minister Muthusamy: 'எல்லோருமே அவரு பெயரை சொல்லி தான்'.. - அண்ணாமலைக்கு அமைச்சர் முத்துசாமி பதிலடி!

Published Mar 11, 2024 02:13 PM IST Karthikeyan S
Published Mar 11, 2024 02:13 PM IST

  • கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த விளக்கப் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னதை குறிப்பிட்டு செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, "தலைமையில் என்ன முடிவு செய்கிறார்களோ அதுதான் எங்கள் முடிவு. திமுக எம்பி கனிமொழி கருணாநிதி பெயரை சொல்லி வாக்கு கேட்பது பற்றி அண்ணாமலை கூறியிருப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அண்ணாமலையை தான் கேட்க வேண்டும், பொதுமக்கள் எடுக்க வேண்டிய முடிவு. அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள், திமுக தான் சரியாக இருக்கும். அவர்கள் தான் திமுக வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். பல கருத்து கணிப்புகள் அதை தான் சொல்கிறது. அவர் சொல்வதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எல்லோருமே கலைஞர் பெயரை சொல்லி தான் கூட்டணி சார்பில் ஓட்டு கேட்டு கொண்டு இருக்கிறோம். இதில் என்ன புதிதாக தவறு கண்டு பிடித்தார் என்று தெரியவில்லை. இதுவெல்லாம் ஒரு குற்றச்சாட்டு இதுக்கெல்லாம் பதில் சொல்வதெல்லாம் தேவையில்லாத வேலை எனத் தெரிவித்தார்.

More