தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Minister Mano Thangaraj Press Meet In Chennai

தேர்தல் பத்திரம் விவகாரம்..பட்டியல் போட்டு புட்டு புட்டு வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ்!

Mar 16, 2024 07:01 PM IST Karthikeyan S
Mar 16, 2024 07:01 PM IST
  • சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜக மிகப்பெரிய ஊழலில் சிக்கியுள்ளது. ஊழலில் சிக்கியதால் மக்களை திசை திருப்ப பல்வேறு முயற்சிகளை பாஜக மேற்கொள்ளும். 2019-ல் இந்த தேர்தல் பத்திரம் நடைமுறையை அவர்கள் கொண்டு வர முயற்சித்த நேரத்தில் ராகுல் காந்தி சொன்னார், இது ஒரு கொள்ளையடிக்க கூடிய முயற்சி என்று சொன்னார். அது மட்டுமல்ல அன்று ஆர்பிஐ, தேர்தல் ஆணையம் போன்றவர்கள் இது வெளிப்படைத் தன்மையை இல்லாமல் ஆக்கிவிடும். இது தேர்தல் நடைமுறையை சீரழித்து விடும். ஊழலை ஊக்குவிக்க வாய்ப்பு உள்ளது என்றனர். ஆனால், எல்லாவற்றையும் மீறி அதை கொண்டு வந்து இன்று கோடி கோடியாக பணக்காரர்களை மிரட்டி, அடிபணிய வைத்து பணத்தை பெற்று இருக்கிறார்கள்." என்று தெரிவித்தார். மேலும், மீனவர்கள் படகுகளை கூட மீட்டு கொடுக்க முடியாதவர், மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்கிறார். கச்சத்தீவை மீட்க பாஜக அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன ? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.
More