MA Subramanian: அச்சுறுத்தும் குரங்கம்மை.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல் என்ன?
- சென்னை விமான நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, கோவை விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு குரங்கம்மை பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. விமான நிலையங்களை ஒட்டியுள்ள அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை. தமிழ்நாட்டில் குரங்கம்மை தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகிறது." என்றார்.