தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு தாவிய பாஜக, அமமுக உறுப்பினர்கள்!

தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு தாவிய பாஜக, அமமுக உறுப்பினர்கள்!

Apr 06, 2024 03:01 PM IST Pandeeswari Gurusamy
Apr 06, 2024 03:01 PM IST
  • திருப்பூர் வடக்கு மாவட்டம், பல்லடம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லேகவுண்டம்பாளையம் மற்றும் சித்தம்பலம் ஊராட்சியில் இருந்து 140 க்கும் மேற்பட்டோர் பிஜேபி மற்றும் அமமுக போன்ற மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி தமிழக தொழில் துறை அமைச்சரும், கழக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளருமான TRB.ராஜா அவர்கள் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் , மாவட்ட துணை செயலாளரும், பொங்கலூர் யூனியன் பெருந்தலைவருமான குமார், பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கோகுல் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
More