Tomato Price Hike: McDonald's நிறுவனத்தையும் விட்டு வைக்காத விலை உயர்வு! தக்காளி இல்லாமல் பர்கர் விற்பனை
- தக்காளி விலை உயர்வானது பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், சர்வதேச உணவு செயின் நிறுவனமான மெக்டெளனால்ட்ஸ் நிறுவனம் தனது மெனுவில் தக்காளியை நீக்கியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் மெக்டெளனால்ட்ஸ் உணவகம் இந்தியாவில் ஏராளமான கிளைகளை கொண்டுள்ளது. இங்கு விற்கப்படும் பர்கர், ராப்ஸ் வகை உணவுகளில் தக்காளி துண்டுகள் சேர்ப்பதை தவிர்த்துள்ளது. நாடு முழுவதும் தக்காளி பற்றாக்குறை, விலை ஏற்றம் ஆகியவற்றின் காரணமாக இந்த முடிவை மெக்டெளனால்ட்ஸ் நிர்வாகம் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. தக்காளி விலையானது ரூ. 100 முதல் ரூ. 200 வரை விற்கப்படுகிறது. இந்திய உணவுகளில் தவிர்க்க முடியாத காய்கறியாக இருந்து வரும் தக்காளி தற்போது சாமனிய மக்களின் எட்டாக் கனியாக மறியுள்ளது. மெக்டெளனால்ட்ஸ் நிறுவனத்தின் இந்த முடிவு காரணமாக இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சிறிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் இந்தியாவின் மேற்கு, தெற்கு பகுதியில் இந்த முடிவால் எந்த தாக்கமும் ஏற்படவில்லை. மெக்டெளனால்ட்ஸ் நிறுவனத்தின் இந்த முடிவுக்கு பலரும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.