Manipur Violence: மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்! துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழப்பு
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Manipur Violence: மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்! துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழப்பு

Manipur Violence: மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்! துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழப்பு

Jan 04, 2024 08:00 AM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 04, 2024 08:00 AM IST

  • மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்திருக்கும் நிலையில் பொதுமக்களில் 5 போர் கொல்லப்பட்டனர். 12க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் காயமடைந்துள்ளனர். கடந்த ஜனவரி 1ஆம் தேதி தௌபால் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். ஐந்து பேர் வரை காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பின்னர் மறுநாளில் பயங்கரவாதிகள் தாக்குதலில் சிக்கி பாதுகாப்பு படையை சேர்ந்த 7 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தெங்னௌபால் மாவட்டத்தில் நிகழ்ந்தது. இங்குதான் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி 13 பேர் கொல்லப்பட்டனர். மணிப்பூரில் நடந்த கலவரத்தில் இதுவரை 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் அரசின் புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்முறை காரணமாக ஐந்து மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. குக்கி மற்றும் மெய்டிஸ் இனத்துக்கு இடையே மீண்டும் வன்முறை வெடித்திருப்பதுடன் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வன்முறைக்கு மியான்மர் நாட்டை சேர்ந்த கூலிப்படையினருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கபடுவதாக மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரன் சிங் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மணிப்பூர் கலவரம் தொடர்பாக எதிர்கட்சிகள் பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, வடகிழக்கு மாநிலங்களை மோடி புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

More