Manipur: மணிப்பூர் வன்முறையில் மற்றொரு கமாண்டோ உயிரழப்பு - மத்திய அரசிடம் உதவி கோரும் மாநில அரசாங்கம்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Manipur: மணிப்பூர் வன்முறையில் மற்றொரு கமாண்டோ உயிரழப்பு - மத்திய அரசிடம் உதவி கோரும் மாநில அரசாங்கம்

Manipur: மணிப்பூர் வன்முறையில் மற்றொரு கமாண்டோ உயிரழப்பு - மத்திய அரசிடம் உதவி கோரும் மாநில அரசாங்கம்

Jan 18, 2024 10:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 18, 2024 10:45 PM IST

  • மணிப்பூரில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினருக்கு இடையிலான துப்பாக்கி சூட்டில் பலி எண்ணிக்கையானது உயர்ந்துள்ளது. மோரேவில் மீண்டும் வன்முறை ஏற்பட்டிருக்கும் நிலையில், இரண்டாவது போலீஸ் காமாண்டோ உயிரழ்ந்துள்ளார். கடந்த புதன்கிழமை நடந்த துப்பாக்கி சூட்டில் இறந்த கமாண்டோவின் பெயர் தகெல்லம்பம் சைலேஷ்வர் என கண்டறியப்பட்டது. பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் இறந்த முதல் கமாண்டோவின் பெயர் வாங்கேம் சோமோர்ஜித் மீதேய் என தெரியவந்துள்ளது. மேலும் இரண்டு கமாம்டோக்கள் கடுமையாக காயமடைந்த நிலையில், அவர்கள் விமானம் மூலம் தலைநகர் இம்பாலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.- மியாண்மர் எல்லை பகுதியை அருகே ஜனவரி 17ஆம் தேதி கடுமையான துப்பாக்கி சூடு நடைபெற்றது. தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ராக்கெட் காமண்டோ சோதனை சாவடியில் ராக்கெட் மூலம் உந்தப்படும் விதமாக பல குண்டுகளை பயங்கரவாதிகள் வீசியுள்ளனர். இதற்கு பதில் தாக்குதலை காமாண்டோக்கள் வெளிப்படுத்தியபோதிலும், போராட்டகாரர்களும் அங்கு இருந்ததால் அந்த பகுதியே வன்முறை களமானது. அத்துடன் பயங்காரவாதிகளும் தொடர்ந்து குண்டுகளை வீசி வந்தனர். இந்த வன்முறையில் குக்கி இனத்தை சேர்ந்த வயதான பெண்மனியும் காயமடைந்தார். கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற வன்முறையில் இரண்டு போலீசாரை கொன்றது தொடர்பாக் குக்கி இனத்தை சேர்ந்த பழங்குடியினர் இருவரை கைது செய்ததன் எதிர்வினையாக இந்த போராட்டம் வெடித்தது.

More