VIRAL VIDEO: யூடியூபில் வியூஸ்களை அதிகரிக்க என்னென்ன பண்றாங்க பாருங்க - ஹைதரபாத்தில் நடந்த சம்பவம்
- யூடியூபில் வியூஸ்களை அதிகரிக்கச் செய்வதற்காக ஹைதராபாத் நகரில் சாலையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்களை அள்ளி வீசி அதனை பொதுமக்கள் போட்டி போட்டு எடுத்துச்செல்வதை வீடியோவாக பதிவு செய்த யூடியூபருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பவண் ஹர்சாய் என்று அழைக்கப்படும் மகாதேவ் என்ற யூடியூபர் கூகட்பள்ளி சாலையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நண்பருடன் பைக்கில் சென்று திடீரென பணத்தை அள்ளி வீசி அதனை எண்ணி பார்த்து எவ்வளவு என்பதை தெரிவிக்கும் நபருக்கு உரிய பரிசை தருவதாக அறிவித்து வியூஸ்களை ஹர்சா அதிகரிக்கச் செய்வதாக கூறப்படுகிறது.