தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Pamban Sea: கடலில் மூழ்கி மாயமான இளைஞரை தேடும் பணி தீவிரம்

Pamban Sea: கடலில் மூழ்கி மாயமான இளைஞரை தேடும் பணி தீவிரம்

May 08, 2024 01:19 PM IST Karthikeyan S
May 08, 2024 01:19 PM IST
  • ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த ஜாகீர் உசேன் மகன் முகமது முஜாஹித் (20). இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் பாம்பன் கடற்கரையில் நேற்று குளித்துக்கொண்டிருந்தார். அப்போது, கடலில் அலை அதிகமாக இருந்ததால் முகமது முஜாஹித் தண்ணீரில் மூழ்கி மாயமானார். இதுகுறித்து அவரது நண்பர்கள் அந்தப் பகுதியில் உள்ள மீனவர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் மாயமான இளைஞரைத் தேடினர். இருப்பினும், அவரை மீட்க முடியவில்லை. தகவல் அறிந்து வந்த கடலோரப் பாதுகாப்பு படை போலீசாரும் இளைஞரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
More