Maharastra Tragedy: இர்சல்வாடி மலை கிராமத்தில் நிலச்சரிவு - 16 பேர் பலி! மீட்பு பணிகள் தீவிரம்
- மகாராஷ்ட்ரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் இருக்கும் இர்சல்வாடி என்ற கிராமம் ஏற்பட்ட நிலச்சரிவில் 16 பேர் பலியாகியுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழு இணைந்து இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் சிலர் என்ஜிஓ மற்றும் ட்ரெக்கிங் குழுவை சேர்ந்தவர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்டிருக்கும் கிராம பகுதி மலையின் சரிவில் அமைந்திருப்பதால் கனரக இயந்திரங்களை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுவரை 21க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். விமானம் மூலம் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்கள் மீட்பதற்கு மகாராஷ்ட்ரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார். கடந்த புதன்கிழமை இரவு இந்த நிலச்சரிவானது ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். கடற்கரையோரம் அமைந்திருக்கும் இந்த கிராம பகுதியில் தொடர் மழை, போதிய வெளிச்சமின்மை இருப்பதுடன் வெல்லம் ஏற்படுவதற்கான அபாயமும் உருவாகியுள்ளது. கடந்த சில நாள்களாக அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக அந்த பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.