viral video: கொளுத்தும் கோடை வெயில்.. தகிக்கும் விநாயகருக்கு ஷவர் குளியலுடன் சிறப்பு பூஜை!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Viral Video: கொளுத்தும் கோடை வெயில்.. தகிக்கும் விநாயகருக்கு ஷவர் குளியலுடன் சிறப்பு பூஜை!

viral video: கொளுத்தும் கோடை வெயில்.. தகிக்கும் விநாயகருக்கு ஷவர் குளியலுடன் சிறப்பு பூஜை!

Published May 08, 2024 05:46 PM IST Karthikeyan S
Published May 08, 2024 05:46 PM IST

  • தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கோடை வெயில் அதிகரித்து வரும் சூழலில், அரியலூரில் உள்ள பால பிரசன்ன சக்தி விநாயகர் கோயிலில் மழை வேண்டி தண்ணீர் தொட்டி அமைத்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. ராகு, கேதுவுடன் அமர்ந்துள்ள விநாயகருக்கு பிரத்யேக தண்ணீர் தொட்டியும், ஷவர் குளியலுமாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக விநாயகர் சிலையை சுற்றி கண்ணாடி தொட்டி அமைக்கப்பட்டு, தண்ணீர், வெட்டிவேர், பன்னீர், திரவியபொடி கலந்து செயற்கை நீருற்று அமைக்கப்பட்டு, விநாயகப் பெருமானை தினந்தோறும் குளிர்வித்து வருகின்றனர். தினமும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாரதனைகள் காண்பிக்கப்படுகிறது. ஏராளமான பொதுமக்கள் இந்த விநாயகரை தரிசித்து வெயில் கொடுமை குறைய வேண்டும் என வேண்டுதல்களை வைத்து வழிபடுகின்றனர்.

More