Sexual Assault: பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. பொதுமக்கள் ரயில் மறியல்..பெரும் பதற்றம்!
- மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தின் பட்லாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்த யுகேஜி குழந்தைகளுக்கு அதே பள்ளியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் பெற்றோர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பள்ளி முன்பு திரண்ட ஏராளமான பெற்றோர்கள் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இச்சம்பவத்தை கண்டித்து பட்லாப்பூர் ரயில் நிலையத்தில் பெற்றோர்களுடன் சேர்ந்து பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.