தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  L Murugan Press Meet: அண்ணாமலை குறித்த கேள்வி! இந்த மாதிரி கேள்விக்கு பதில் சொல்வதாக இல்லை - டென்ஷனில் எல். முருகன்

L Murugan Press Meet: அண்ணாமலை குறித்த கேள்வி! இந்த மாதிரி கேள்விக்கு பதில் சொல்வதாக இல்லை - டென்ஷனில் எல். முருகன்

Jun 18, 2024 06:50 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 18, 2024 06:50 PM IST
  • சென்னை விமான நிலையத்துக்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், " தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி அபரிதமானதாக இருக்கிறது. வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்பது எதிர்பார்த்த விஷயம் தான். அவர்கள் குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் வாய்ப்பு கொடுக்காமல் குடும்ப அரசியல் செய்கிறார்கள். அண்ணன், அம்மா, இப்போ சகோதரி. இதில் ஆச்சயர்படும் விஷயம் எதுவுமில்லை. தொடர்ந்து பாஜக மாநில தலைவராக அண்ணாமலை உள்பட யார் வந்தாலும் மீண்டும் கூட்டணி இல்லை என அதிமுக கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, இந்த மாதிரி கேள்விக்கு பதில் சொல்வதாக இல்லை. இந்த மாதிரி கேள்வி கேட்க வேண்டாம் என்று டென்ஷனாக பதில் அளித்தார். அத்துடன் ரயில்வேதுறையை புறக்கணிப்பதாக மேற்கு வங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்துக்கும், மேகதாட்டு விவகாரத்தில் நீர்வளத்துறை இணை அமைச்சர், கூட்டணி கட்சி தலைவர் கூறிய விமர்சனங்கள் குறித்தும் அவர் பதில் அளித்தார்.
More