தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Kp Munusamy Slams Bjp And Annamalai In Former Cm Jayalalitha Birthday Meeting

KP Munusamy: "தில் இருந்தால் நிர்மலா சீதாராமன், ஜெயசங்கரை தேர்தலில் நிறுத்துங்கள்" - கே.பி. முனுசாமி விளாசல்

Mar 01, 2024 06:40 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 01, 2024 06:40 PM IST
  • பாரதிய ஜனதா கட்சிக்கு தில் இருந்தால், தமிழ்நாடு மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை இருந்தால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை தமிழ்நாட்டின் எந்த தொகுதியிலாவது தேர்தலில் போட்டியிட வையுங்கள். தமிழ்நாடு மக்கள் எப்படி பாடம் புகட்டுவார்கள் என்பதை அப்போது தெரிந்து கொள்வீர்கள். இது திராவிட மண். அண்ணாமலையை பார்த்து கேட்கிறேன், திராவிட கட்சிகளால் தமிழ்நாடு சீரழிந்துவிட்டதாக சொல்கிறீர்களே, தமிழ்நாடு இன்றைக்கு எல்லா துறையிலும் முதன்மை மாநிலமாக இருக்கிறது. பாஜக 17 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது. ஆனால் தமிழ்நாட்டுக்கு தான் மத்திய அரசின் விருதுகள் கிடைக்கிறது. ஐபிஎஸ் ஆபிசர், மெத்த படித்தவர், ரொம்ப அறிவாளி என்று சொல்லப்படும் அண்ணாமலைக்கு இது தெரியாதா என்று கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி பேசினார். பாஜகவை அவர் கடுமையாக விமர்சித்து பேசிய விடியோ இதோ
More