Theni: ஓட்டு போட்டது பாவமா? 50 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை - கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Theni: ஓட்டு போட்டது பாவமா? 50 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை - கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

Theni: ஓட்டு போட்டது பாவமா? 50 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை - கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

Apr 19, 2024 04:31 PM IST Muthu Vinayagam Kosalairaman
Apr 19, 2024 04:31 PM IST

  • தேனி மாவட்டம் போடி தலுக்காவுக்கு உள்பட்ட அகமலை ஊராட்சி ஒன்றியத்தில் கீழ் இருக்கும் ஊரடி, ஊத்துக்காடு, சுப்பிரமணியபுரம், குரவன் குழி, பேச்சியம்மன் சோலை உள்ளிட்ட 10 மலை கிராமங்களுக்கு, கடந்த 50 ஆண்டுகளாக சாலை வசதி செய்து தரக்கோரி தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் இதுவரையில் சாலை வசதி செய்து தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மலை கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் சோத்துப்பாறை அணை அருகே மலை கிராமத்துக்கு செல்லும் பாதையில் அமர்ந்து தேர்தலை புறக்கணிக்க போவதாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மலை கிராமத்துக்கு செல்லும் வாக்குச்சாவடி இயந்திரம் மற்றும் வாக்குச்சாவடி பணிக்கு செல்லும் ஊழியர்களையும் அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

More