தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Kkssr Ramachandran Press Meet At Srivilliputhur

'அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்' - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் பேட்டி!

Feb 09, 2024 04:54 PM IST Karthikeyan S
Feb 09, 2024 04:54 PM IST
  • KKSSR Ramachandran: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.5.31 கோடி மதிப்பில் வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், தமிழ்நாடு முதலமைச்சர், தமிழகத்தில் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு எளிதிலும், விரைவாகவும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நிர்வாக கட்டமைப்புகளை ஏற்படுத்துதற்கு பல்வேறு திட்டங்கைள வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டு நிதித் திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது." என்றார். வருவாய்த் துறையினரின் தொடர் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "அரசு அலுவலர்களுக்கு ஒவ்வொரு நேரமும் வெவ்வேறு விதமான தேவைகள் இருக்கும் என்றும் 6 மாதத்திற்கு ஒருமுறை கோரிக்கைகளை துறை அமைச்சர் என்ற முறையில் தெரிவிப்பார்கள். 4 கோரிக்கைகள் சொன்னால் 2 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் அதில் அவர்கள் மகிழ்ச்சி அடைவதாகவும் பிறகு 2 கோரிக்கைகளையும் நிறைவேற்றுவோம் என்றார். கடந்த அரசாங்கத்தை விட திமுக அரசாங்கம் அரசு அலுவலர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளதாகவும் குறிப்பாக வருவாய்த்துறை தாசில்தார் சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றியதோடு பணியிடங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
More