Coimbatore: 'வெத்தலை போட்ட சோக்குல' பாடல் பாடி இரட்டை இலைக்கு ஓட்டு கேட்ட கார்த்தி!-karthi asked for the vote for the double leaf by singing the song vethala pota chokula - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Coimbatore: 'வெத்தலை போட்ட சோக்குல' பாடல் பாடி இரட்டை இலைக்கு ஓட்டு கேட்ட கார்த்தி!

Coimbatore: 'வெத்தலை போட்ட சோக்குல' பாடல் பாடி இரட்டை இலைக்கு ஓட்டு கேட்ட கார்த்தி!

Apr 17, 2024 02:38 PM IST Pandeeswari Gurusamy
Apr 17, 2024 02:38 PM IST

நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அதிமுகவின் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் சூலூர் அண்ணா சீரணி கலையரங்கம் அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அண்ணாமலை போன்றவர்கள் எதற்காக ஐபிஎஸ் பணியை விட்டு விட்டு அரசியலுக்கு வந்தார்கள் என்று தெரியவில்லை ஆனால், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக சிங்கர ராமச்சந்திரன் தனது பணியை உதறிவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார் எனவே அவரை வெற்றி பெறச் செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என பேசினார். அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் வெத்தல போட்ட சோக்குல என்ற அமரன் திரைப்படப் பாடலை பாடுமாறு நடிகர் கார்த்திக்கிடம் வேண்டுகோள் விடுத்தனர். வெத்தல போட்ட சோக்குல பாடலை பாடிய நடிகர் கார்த்திக், கப்புனு குத்தின மூக்குல வந்தது பாரு ரத்தம் என்ற வரிகளை பாடிவிட்டு அந்த ரத்தம் யாருக்கு வந்தது என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என சொன்னபோது, பதிலுக்கு அதிமுக தொண்டர்கள் அண்ணாமலைக்கு என கூச்சலிட்டனர்

More