Tamil News  /  Video Gallery  /  Kalistan Terrorist Pannun Threatens To Shut Down World Cup Final In Gujarat

Kalistan Terrorist: இந்தியா - ஆஸ்திரேலியா உலகக் கோப்பை பைனலை நிறுத்துங்க! காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்

Nov 18, 2023 09:12 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 18, 2023 09:12 PM IST
  • இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியை நிறுத்தும்படி காலிஸ்தானிய பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணுன் மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் விடியோவில், மிரட்டல் விடுத்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வதால் இந்திய ஏஜென்சிகள் இந்திய ஏஜென்சிகள் உஷார் நிலையில் உள்ளன. கடந்த காலங்களில் இந்தியாவில் நிகழ்ந்த வகுப்புவாத கலவரங்கள் மூலம் இந்தியர்கள் மத்தியில் எதிர்ப்பு உணர்வுகளை தூண்டிவிடும் விதமாக விடியோவில் பேசியுள்ளார். காசாவில் நடைபெற்று வரும் இனஅழிப்பு காரணமாக இந்தியாவும் இருப்பதாக தெரிவித்துள்ளார் பண்ணுன். இவர் ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டிக்கு எதிராக மிரட்டல் விடுத்திருந்தார். இதன் காரணமாக குஜராத் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படும் என கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. பண்ணுன் அமெரிக்கா, கனடா என இரு நாடுகளிலும் குடியுரிமை பெற்றவராக உள்ளார்.
More