தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Operation Against Poonch Attack: தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் - 5 இந்திய ராணுவ வீரர்கள் பலி

Operation Against Poonch Attack: தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் - 5 இந்திய ராணுவ வீரர்கள் பலி

May 06, 2023 12:44 AM IST Muthu Vinayagam Kosalairaman
May 06, 2023 12:44 AM IST
  • ஐம்மு காஷ்மீர் மாநிலம் ராஜோரியில் நடைபெற்ற தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மூன்று ராணுவ வீரர்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராணுவத்தினர், தீவிரவாதிகள் இடையிலான மோதலின்போது, தீவிரவாதிகள் குண்டு வெடிக்க செய்தனர். கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி பூஞ் பகுதியில் தாக்குதல் நிகழ்த்திய தீவிரவாதிகள் ஒழித்து கட்டும் விதமாக ராணுவத்தினர் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். ஆனால் இதில் எதிர்பாராதவிதமாக 5 ராணுவத்தினர் பலியாகியுள்ளனர். தற்போது இந்த தாக்குதல் ராஜோரி மாவட்டம் கேஸ்ரி மலைப்பகுதியில் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் இரண்டாவது தாக்குதலாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், நான்கு பேர் உதம்பூரில் உள்ள மருத்துவமனைக்கு படுகாயங்களுடன் எடுத்து செல்லப்பட்டனர். இதில் மூன்று பேர் சிகிச்சை பலனின்ற கடுமையான காயங்களால் உயிரிழந்தனர். முன்னதாக, தாக்குதல் நடத்தப்பட்ட கேஸ்ரி மலைப்பகுதியில் உள்ள குகைகளில் தீவரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
More