ஜப்பான் விமானத்தில் பயங்கர தீ.. பயணிகள் மீட்கப்பட்டது எப்படி? - ஷாக் வீடியோ
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  ஜப்பான் விமானத்தில் பயங்கர தீ.. பயணிகள் மீட்கப்பட்டது எப்படி? - ஷாக் வீடியோ

ஜப்பான் விமானத்தில் பயங்கர தீ.. பயணிகள் மீட்கப்பட்டது எப்படி? - ஷாக் வீடியோ

Jan 02, 2024 07:59 PM IST Karthikeyan S
Jan 02, 2024 07:59 PM IST

  • ஜப்பானின் டோக்யோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது.
  • ஜப்பானின் டோக்யோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் ஏர்லைன் நிறுவனத்தின் விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் நின்றிருந்த கடலோரக் காவல்படை விமானம் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளானதும் உடனடியாக இரண்டு விமானங்களும் தீப்பிடித்து எரிந்தன. விமானம் முழுவதும் தீ பற்றுவதற்குள், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனா். விமான பணியாளர்கள் மற்றும் பயணிகள் என மொத்தம் 379 பேர் அந்த விமானத்தில் இருந்து மீட்கப்பட்டனா். இதனிடையே ஜப்பானின் கடலோரக் காவல்படை விமானத்தின் விமானி மட்டும் வெளியே குதித்து தப்பியதாகவும், அதில் இருந்த 5 பேரின் கதி என்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஜப்பானை பொறுத்தவரையில் இதற்கு முன்னதாக இதுபோன்ற பெரிய விமான விபத்தை கண்டதில்லை. கடந்த 1985ஆம் ஆண்டு நிகழ்ந்த விமான விபத்தில் 520 பேர் உயிரிழந்தனர். இது ஒரு மோசமான நிகழ்வாக அப்போது கருதப்பட்டது. எனினும் இந்த விபத்தில் பயணிகள் யாரும் உயிரிழக்கவில்லை என்ற செய்தி நிம்மதி அளிப்பதாக இருக்கிறது. ஜப்பானில் உள்ள பரபரப்பான விமான நிலையங்களில் ஹனடா விமான நிலையமும் ஒன்றாகும். ஜப்பானில் புத்தாண்டு அன்று 7.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கமும், அதனைத் தொடா்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 50 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

More