Japan: பரிசோதனையின்போது ராக்கெட் எஞ்சின் வெடிப்பு! ஜப்பானில் தொடர்ச்சியாக நிகழ்ந்த மூன்றாவது சம்பவம் - அதிர்ச்சி விடியோ
- ஜப்பானில் விண்வெளி நிறுவனம் ஒன்று ராக்கெட் ஏஞ்சின் பரிசோதனை மேற்கொண்டபோது தீப்பிடித்து பற்றி எரிந்த சம்பவம் குறித்து தெரியவந்துள்ளது. கடந்த மாதம் 14ஆம் தேதி நிகழ்ந்த இந்த சம்பவம், தற்போது தான் வெளியாகியுள்ளது. சோதனை முயற்சி மேற்கொள்ளபட்ட ராக்கெட்டின் பெயர் எப்சிலான் எஸ் ஆகும். பரிசோதனை களத்தில் ஏவப்பட்டபோது திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், அந்தப் பகுதியே புகைமண்டலமாக மாறி காட்சியின் விடியோ வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படுவதாக ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் அகிடா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சமீப காலமாக ஜப்பானில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ராக்கெட் ஏவும் பரிசோதனை தோல்வியில் முடிந்துள்ளது