Jhanvi Kapoor: ராக்கி கட்டுங்கள் ப்ளீஸ்.. பொது இடத்தில் ரசிகர் கோரிக்கையை நிறைவேற்றிய ஜான்வி கபூர் - குவியும் பாராட்டு
- நாடு முழுவதும் சகோதரத்துவதை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. அண்ணன், தங்கை இடையிலான பாசத்தின் பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பாலிவுட் இளம் ஹீரோயினான ஜான்வி கபூர் சகோதரியாக பாவித்து ரசிகர் ஒருவர் அவரிடம் ராக்கி கயிறு கட்டுமாறு கோரியுள்ளார். அதை ஏற்றுக்கொண்டு ஜான்வி கபூரும் அவருக்கு ராக்கி கட்டியுள்ளார். இதன் பின்னர் அந்த நபர் சகோதரியாக மாறிய ஜான்விக்கு பணம் கொடுக்கவும் முயற்சித்துள்ளார். இதுதொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.